ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி கிராமம் குயவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் ரமேஷை கடித்தது. உறவினர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். இந்நிலையில் ரமேஷ் இன்று உயிரிழந்தார். இது குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு விதிகளின்படி நல்லடக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.