சோளிங்கர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

69பார்த்தது
சோளிங்கர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்
சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒட்டனேரியைச் சேர்ந்த சிலர் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதைக் கண்டதும் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் மணலுடன் லாரியைச் சோளிங்கர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி