சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் ஆனி கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தோசிகபெருமாள் சாமிக்கு பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.