பாணாவரம் அருகே போலி டாக்டரின் கிளினிக்கு சீல்

80பார்த்தது
பாணாவரம் அருகே போலி டாக்டரின் கிளினிக்கு சீல்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே காட்டுப்பாக்கம் கிராமத்தில் லோகநாதன் (வயது 44) என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமல் சில ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோளிங்கர் அரசு டாக்டர் கருணாகரனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்பேரில் நேற்று நெமிலி தாசில்தார் ராஜலட்சுமி, பாணாவரம் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் சுகாதாரத்துறையினர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். 

இதில் லோகநாதன் முறையாக ஆங்கிலம் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, அவர் நடத்தி வந்த கிளினிக்கை வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர். மேலும் இதுதொடர்பாக பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி