முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்-எஸ்பி அறிவிப்பு!

580பார்த்தது
முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்-எஸ்பி அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்பு நடந்த அனைத்து தேர்தல்களிலும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் முன்னாள் படை வீரர்கள் சிறப்பாக பாதுகாப்பு பணிபுரிந்துள்ளனர்.

அதேபோல் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலிலும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க வேண்டி வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், காவல்துறை, தீயணைப்பு, வனம், சிறைத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சகோதரர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பினை அளிக்க வேண்டும்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வர விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவை அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கலாம் அல்லது போலீஸ் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 93638 68465 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி