சோளிங்கரை அடுத்த வன்னியமோட்டூர் கிராமத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நாகராஜுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு செல்லும் ஓடைகால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை தி. மு. க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்தர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் எஸ். என். உதயகுமார், ஒன்றிய நிர்வாகிகள் சக்கரவர்த்தி, தண்டபாணி, விஜயகுமார், கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு எஸ். என். பூரணசந்திரன் நிதி உதவி வழங்கினார்.