சோளிங்கரை அடுத்த வெங்குபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் நாராயணன். இவரின் மகன் வினோத்குமார் (வயது 28), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெமிலியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அரக்கோணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சம்பத்துராயன்பேட்டை பகுதியில் நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்ததில் பலத்தகாயம் அடைந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர்.
வினோத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.