நெமிலியில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

83பார்த்தது
நெமிலியில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ- ஜாக்) சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார சங்கத்தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக டிட்டோ-ஜாக் ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் கலந்து கொண்டு பேசினாா்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தகுதி தேர்வை ரத்து செய்யவேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மாநில அரசு ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும். அரசாணை 243-ஐ ரத்து செய்ய அரசு முன்வரவேண்டும் என்பது உள்ளி்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் மாவட்ட பொருளாளர் முருகன், வட்டாரத்தலைவர்கள் கோவிந்தன், தினகர், வட்டார செயலாளர்கள் சண்முகம், இளையராஜா, வட்டார பொருளாளர் சுப்பிரமணி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி