வாலாஜா அரசுப் பெண்கள் பள்ளியில் போட்டி

0பார்த்தது
வாலாஜா அரசுப் பெண்கள் பள்ளியில் போட்டி
வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டி நடந்தது. பேச்சுப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் ஆற்றிய பண்புகள் மற்றும் வரலாறு பண்பாடு மொழி வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசினர். மேலும் வரலாற்று சம்பந்தமான கட்டுரைகளை எழுதி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி