அரக்கோணம் டவுன் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர் சிரஞ்சீவிலு தலைமையில் போலீசார் 2 குழுக்களாக பிரிந்து பழைய பேருந்து நிலையம், சுவால்பேட்டை, ஜோதிநகர், பழனி பேட்டை, விண்டர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொ ருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனையில் ஈடுபட்டனர்.
ஜோதி நகர் பகுதியில் உள்ள பாபு (40) என்பவரது கடையில் சோதனை செய்தபோது கடையின் பின்புறம் குட்கா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 50 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாபு மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.