தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு!

61பார்த்தது
தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு!
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட நேரு பஜார் பஸ் நிறுத்தம் அருகே தெப்பக்குளம் உள்ளது. அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவின் போது இந்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். திமிரி பெரிய ஏரி நிரம்பியதும், மதகு வழியாக இந்த குளத்துக்கு நீர் வருவதற்கு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

குளத்தை முறையாக பராமரிக்காமல் விட்டதன் காரணமாக, குளத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் வராமல் தடைபட்டுள்ளது. களைச்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சமீபகாலமாக குளத்தில் நிரம்பி வருகிறது.

இதனால், குளத்தில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குளத்தை மீண்டும் சீரமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி