ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 80 வயது மூதாட்டியை தரதரவென இழுத்துச் சென்று இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு அருகே நின்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 19 வயது இளைஞர் நந்தகுமார் என்பவர் எல்லை மீறியுள்ளார். ஒருகட்டத்தில் மூதாட்டியை தரதரவென இழுத்துச் சென்று மறைவான பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மூதாட்டியை கொலை செய்துள்ளார். நந்தகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.