ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. அப்போது மாற்றுத்திறனாளிகளும் கோரிக்கை மனுக்கள் தருவதற்காக வந்திருந்தனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கே சென்று அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரித்தார். அவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உடன் இருந்தார்.