ராணிப்பேட்டை மாவட்டம் மேலப்புலம் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் அரக்கோணத்தில் இருந்து ஓச்சேரி செல்லும் சாலையில் உத்திரம்பட்டு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி முடிவுற்றது. இங்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (பிப்ரவரி 05) தரப்பரிசோதனை செய்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், நெமிலி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பல்வேறு துறை அரசு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.