ராணிபேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பெரும்பாலான பேருந்துகள் நின்று செல்லாததால் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
இது தொடர்பாக போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், சமூக ஆர்வலர் முஹம்மத் சாகீப் VT சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்திற்கு புகார் அளித்தார். அதன் பேரில், அச்சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் டாக்டர் சையத் அஸ்ஹர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு அளித்தார். அதன்படி, மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்த உத்தரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாதாரண கட்டணம் வேலூரில் இருந்து 15 ரூபாய் மற்றும் விரைவு பேருந்துகளில் 16 ரூபாய் கட்டணமாக பெறப்படும் எனவும், UD, AC, PP தவிர சாதாரண பேருந்து விரைவு பேருந்து டீலக்ஸ் போன்ற பேருந்துகள் (தடம் எண் 84, 502, 777, 156, 157, 155, 303, 528 ஆகிய பேருந்துகள்) பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முறையாக கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மேல்விஷாரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காவிட்டால், அது தொடர்பாக 9445456024 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.