தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. ராணிப்பேட்டை மற்றும் சோளிங்கர் நகரில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த கடைகளை கண்டறிந்து, கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உணவு பாதுகாப்பு அதிகாரி சுதாகர் சீல் வைத்தார். பின்னர், ரூ. 25, 000 அபராதம் விதிக்கப்பட்டது.