வாலாஜா அருகே அரசு பள்ளியை சூழ்ந்த மழை வெள்ளம்

81பார்த்தது
வாலாஜா அருகே அரசு பள்ளியை சூழ்ந்த மழை வெள்ளம்
வாலாஜா, கீழ்மின்னல் அடுத்த கன்னிகாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. வாலாஜா தாலுகாவில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கன்னிகாபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பாக குளம் போல் இன்று மழை நீர் தேங்கியுள்ளது.

ஜூன் 10ம் தேதி பள்ளி திறக்க உள்ள நிலையில், மழை நீரை அகற்றுமாறு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி