ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் கிராமத்தில் மார்கண்ட ரெட்டியின் பசுமாடு இன்று தவறி கிணற்றில் விழுந்தது. தகவல் கிடைத்தவுடன் சோளிங்கர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பசுமாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டனர். இந்த செயலுக்கு மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.