சோளிங்கரில் தேசிய மக்கள் நீதிமன்றம்!

71பார்த்தது
சோளிங்கரில் தேசிய மக்கள் நீதிமன்றம்!
சோளிங்கர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சோளிங்கர் ஒருங்கிணைந்த கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி நித்தியா தலைமையில் நடந்தது. இதில் நீதிபதிகள் நித்தியா, நிலவரசன் ஆகியோர் அமர்வில் 15 உரிமையியல் வழக்கு களும் 109 குற்றவியல் வழக்குகளும் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் வழக்கு சமரசமாக பேசி முடிக்கப்பட்டு, ரூ. 10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் பல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதில் சோளிங்கர் வக்கீல்கள் சங்க நிர்வாகி கள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் சோளிங்கர் வட்ட சட்டப் பணிகள் குழு இளநிலை நிர்வாக உதவியாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி