ராணிப்பேட்டையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி

71பார்த்தது
ராணிப்பேட்டையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி
ராணிப்பேட்டையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி தனியார் கிளப் சார்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 5, 10, 21, 42 கிலோமீட்டர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறுவர்கள், இளைஞர்கள், மாணவ- மாணவிகள், பெரியவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பெல் ஆன்சிலரி எஸ்டேட்டின் நுழைவு வாயிலில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

21 கிமீ, 42 கிமீ பிரிவு போட்டிகளை தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத்காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நான்கு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெல் செயல் இயக்குனர் அருண்மொழி தேவன், தொழிலதிபர் அக்பர்ஷெரீப், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எஸ். வினோத், ஒன்றிய செயலாளர்கள் அக்ராவரம் முருகன், சேஷா வெங்கட் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி