ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை 16-வது வார்டு காகிதகாரத் தெரு பின்புறமாக அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் முன்பாக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், பள்ளிக்கு வருகை தரும் மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.