வாலாஜா தாலுகா நந்தியாலம் பூஞ்சோலை நகரில் அமைந்துள்ள பூஞ்சோலை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத யொட்டி நந்தியாலம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது. பிற்பகலில் புலிவே டம், பொய்க்கால் கட்டை, சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் அம்மன் வீதி உலா நடந்தது.
மாலையில் பழம் குத்தி அக்னி கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர் ஒருவர் கயிறு கட்டி உடலில் கொக்கி போட்டு குழந்தையை சுமந்து அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்தி கடனை செலுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை பூஞ்சோலை நகர் இளைஞர்கள் செய்திருந்தனர்.