ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் சோளிங்கர் தனியார் தொழிற் சாலையில் வேலை மறுக்கப்பட்ட தொழிலாளர் கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொதுச்செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாநில சிறப்புத்தலைவர் ரணியப்பன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சோளிங்கரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 50 பேரை அந்நிறுவனம் கடந்த 3-ந் தேதி வேலையில் இருந்து நீக்கியது. வேலை மறுக்கப்பட்ட தொழிலாளர்க ளுக்கு வேலை வழங்க வேண்டும், நிரந்தர தொழிலை ஒப்பந்தம் செய்வதை நிறுவனம் கைவிட வேண்டும். 17 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.