வாலாஜா சித்தூர் சாலையில் எமரால்டு நகர் பகுதியில் நேற்று இரவு மேல்மருவத்தூர் பக்தர்களை ஏற்றி சென்ற கர்நாடக் அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இன்று அவர்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.