ராணிப்பேட்டையில் அண்ணாமலை உருவபொம்மை எரிப்பு!

57பார்த்தது
ராணிப்பேட்டையில் அண்ணாமலை உருவபொம்மை எரிப்பு!
அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமியை அவதூறாக பேசியதாக, நெமிலி கிழக்கு ஒன்றிய, நகர அ. தி. மு. க. நெமிலி பேருந்து நிலையத்தில் தமிழக பா. ஜனதா தலைவர் அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ. ஜி. விஜயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்வம், பொருளாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அண்ணாமலையின் உருவ பொம்மையை அ. தி. மு. க. வினர் சாலையில் இழுத்து சென்று தீ வைத்து எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். சம்பவம் குறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோன்று அரக்கோணம் மேற்கு ஒன்றிய அ. தி. மு. க. செயலாளர் பழனி தலைமையில் சாலை கிராமத்தில் அ. தி. மு. க. வினர் அண்ணாமலை உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, காவேரிப்பாக்கம் பேரூர் அ. தி. மு. க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப் பாட்டத்திற்கு காவேரிப்பாக்கம் பேரூர் செயலா ளர் ஆர். வி. என். மஞ்சுநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் ரங்கநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பா. ஜனதா தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து கண்டன
கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி