காவேரிப்பாக்கம் ஏரியில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஏரியில் பிணமாக கிடந்தது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிராமன் பார்த்தி (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.