இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை!

62பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாகோயில் கிராமம் அம்மன்நகர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன். இவரது மனைவி ராஜேஸ்வரி (22). வேலூர் காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ஒரு மகனும், 4 மாத கைக்குழந்தையும் உள்ளது. மணிகண்டன் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்கிறார். மணிகண்டன் கடந்த ஒரு வருடமாக ராஜாகோவில் பகுதியில் தனது பெற்றோர் சரவணன், பரிமளா ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

மணிகண்டனின் தாயார் பரிமளா குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது வீட்டில் உள்ள ஒரு அறை உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ராஜேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ராஜேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி