வேலூர் மாவட்டம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிரானந்த் வெற்றி பெற்றதை குடியாத்தத்தில் கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர் இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் உட்பட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக குடியாத்தம் பகுதிக்கு வந்து அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வரவேற்பு அளிப்பதற்காக கட்சித் தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் குத்தாட்டம் போட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.