வேலூர் மாவட்ட திட்ட குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.பாபுவை இன்று வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் குறை தீர்வுக்குழு உறுப்பினர் முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்டத் தலைவர் சரகுப்பம் மு.சேகர், மாவட்ட பொருளாளர் சூராளூர் பா.ஆனந்தன், செய்தித் தொடர்பாளர் மற்றும் குடியாத்தம் ஒன்றியச் செயலாளர் கோப்பம்பட்டி மோ.பழனிவேலன், போஜனாபுரம் முக்கியப் பிரமுகர் வி.ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் உள் வட்டம் போஜனாபுரம் வருவாய் கிராமம் சுந்தரகுட்டை பகுதியில் புதியதாக பகுதி நேர கூட்டுறவு நியாயவிலை அங்காடி துவக்கி வைத்திட அழைப்பு விடுத்தனர்.
மேலும் போஜனாபுரம் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சீவூரான்பட்டி பேருந்து நிலையம் நிழற்கூடம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் ஏற்படுத்துதல், அடிப்படை வசதிகள் உடன் நோயாளிகள் காத்திருப்பு அறை கட்டுதல், ரூபாய் 35.50 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுச்சுவர் கட்டுதல் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.