குடியாத்தத்தில் உள்ள ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தின் சார்பில் வள்ளலார் 200-வது பிறந்த நாள் விழா 2 நாட்கள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு சங்க தலைவர் எம். எம். சிவஞானம், செயலாளர் புலவர் வே. பதுமனார், விழா குழு தலைவர் எம். கே. பொன்னம்பலம், நகரமன்ற தலைவர் எஸ். சவுந்தரராஜன், வக்கீல் கே. எம். பூபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சியில் ஜோதி தரிசனம் நடைபெற்றது. அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ரோட்டரி முன்னாள் ஆளுனர் ஜே. கே. என். பழனி தொடங்கி வைத்தார். திருவருட்பா அருளுரை என்ற தலைப்பில் கோபி செட்டிபாளையம் திருஞான சம்பந்தர் மடம் தவத்திரு சிவக்கார தேசிக சுவாமிகளும், காலம் தோறும் வள்ளுவம் என்ற தலைப்பில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் கி. பார்த்திபராஜாவும், புனிதர் வள்ளலார் வழங்கிய புது நெறி என்ற தலைப்பில் சென்னை மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தியும் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிகளில் அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் எம். என். ஜோதிகுமார், விழா குழுவை சேர்ந்த புலவர் சண்முக செங்கல்வராயன், டி. எஸ். திருநாவுக்கரசு, கோ. ஜோதி, வி. பிச்சாண்டி, எம். எஸ். இன்பநாதன், டி. கே. சதாசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் 200-வது பிறந்த நாள் விழா குழுவினர் மற்றும் ராமலிங்க சுவாமிகள் சமரச சன் மார்க்க சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.