வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சென்ராயனப்பள்ளி, வளத்தூர், பசுமத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கடந்த சில வாரம் காடை மோகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் தலைக்கு விக்கு அணிந்து கொண்டு திருடச் செல்வதால் போலீஸாரால் குற்றவாளியை கண்டுபிடிக்க சிரமம் ஏற்பட்ட நிலையில் அவனை கைது செய்து அவனிடமிருந்து வெள்ளிப் பொருட்கள் தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவரை சிறைக்கு அனுப்பிய நிலையில், அவனது கூட்டாளியான டான்ஸ் மாஸ்டர் சிவா என்கிற சிவானந்தம் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் போலீசார் வாகனத்தை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக நடந்து வந்த நபர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். பின்னர் அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.