ரூபாய் எட்டு கோடிக்கு மது விற்பனை

55பார்த்தது
ரூபாய் எட்டு கோடிக்கு மது விற்பனை
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஒட்டி மது குடித்துவிட்டு கலாட்டாவில் ஈடுபடுவது மோதலில் ஈடுபடுவது என அசம்பாவித செயல்கள் நடைபெறலாம் என கருதி வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் பலர் நேற்று முன்தினம் டாஸ்மார்க் கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த மது வகைகளை வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தை உள்ளடக்கிய வேலூர் கோட்டத்தில் 160 மதுபான கடைகள் உள்ளது. இங்கு ரூபாய் 4 கோடியே 80 லட்சத்துக்கு மதுபானம் விற்பனையானது. இது போல் ராணிப்பேட்டை மாவட்டத்தை உள்ளடக்கிய அரக்கோணம் கூட்டத்தில் 83 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இங்கு ரூபாய் மூன்று கோடியே 40 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் மொத்தம் ரூபாய் எட்டு கோடியே 20 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி