ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்ட வீட்டை நகர்த்தும் பணி தீவிரம்!

65பார்த்தது
ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்ட வீட்டை நகர்த்தும் பணி தீவிரம்!
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தென்றல் நகர் உள்ளது. இங்குள்ள பூங்கா அருகே ரூ. 22 லட்சத்தில் ஒருவர் வீடு ஒன்று கட்டியிருந்தார். அந்த வீட்டை நகர்த்துவதற்கு அவர் முடிவு செய்தார்.

இந்த நிலையில் வீட்டை நகர்த்துவதற்காக சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றை அவர் அணுகினார். இதையடுத்து அந்த வீட்டையொட்டியவாறு அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. தற்போது வீட்டை ஜாக்கி மூலம் சுமார் 3 அடி உயரம் உயர்த்தி நகர்த்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக 142 ஜாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் வீடு நகர்த்தப்பட்டு விடும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதற்காக ரூ. 7 லட்சம் வரை செலவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி