பேரணாம்பட்டு: டூவீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது!

64பார்த்தது
பேரணாம்பட்டு: டூவீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மேல்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் மேல்பட்டி காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எம். வி. குப்பம் கிராமத்தில் பாலாற்றில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த சிவா (21) என்பவர் டூ வீலரில் 8 மூட்டைகளில் மணல் கடத்தி கொண்டு சென்றார்.

அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் மூட்டைகளுடன் டூ வீலரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி