பேரணாம்பட்டு: நெல் பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

69பார்த்தது
பேரணாம்பட்டு: நெல் பயிரை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி கிராமத்தில் மலட்டாற்றையொட்டி அண்ணாமலை என்பவர் ஒரு ஏக்கர் நெல் பயிரிட்டுள்ளார். அதிகாலை அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து 10-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள், அண்ணாமலையின் விவசாய நிலத்திற்குள் புகுந்து அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிரை ருசித்தும், மிதித்தும் நாசப்படுத்தியது.

இதனை பார்த்த விவசாயிகள் பட்டாசு வெடித்து காட்டு பன்றிகளை போராடி விரட்டினர். இது குறித்து தகவலறிந்த வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கடந்த சில நாட்களாக பேரணாம்பட்டு சுற்றுப்புற கிராமங்களில் விவசாய நிலங்களில் காட்டு யானைகள், காட்டு பன்றிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதால் கவலையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி