நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் திடீர் சாலை மறியல்

78பார்த்தது
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் திடீர் சாலை மறியல்
குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட குப்பைமேடு பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்காக சாலையை தோண்டி கொத்தப்பட்டு 3 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் அங்குள்ள 6 மின் கம்பங்கள் உடைந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளன. அந்த மின் கம்பங்கள் இதுவரை மாற்றி அமைக்கப்படவில்லை.

இதுதவிர கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து குப்பைமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பேரணாம்பட்டு நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள் யாரும் விசாரிக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் எதிரில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த நகராட்சி ஆணையாளர் வேலன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததும், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி