குடியாத்தம் ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி ராஜேஸ்வரி (71). 2 பேரும் தனியாக வசித்து வந்தனர்.
ராஜேஸ்வரி வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜை செய்து உள்ளார். அப்போது சாம்பிராணி புகை தூவுவதற்காக மரக்குச்சிகளை தீயிட்டு எரித்தார்.
எதிர்பாராத விதமாக தீ அருகில் இருந்த பஞ்சு மெத்தைக்கு பரவியது. பஞ்சு மெத்தை சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் வீடு முழுவதும் கரும்பு புகை மண்டலம் சூழ்ந்தது. தீயை அணைக்க ராஜேஸ்வரி வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்தார். இருப்பினும் வீடு முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததால் ராஜேஸ்வரி மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.