குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் சுவாமி மெடிக்கல் இணைந்து நடத்திய பொது மருத்துவம் முகாம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று செதுக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கே எம் ஜி கல்லூரி செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன், குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் , ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஜே கே என் பழனி வழக்கறிஞர் பூபதி, சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், விஐடி துணைத்தலைவர் முனைவர் செல்வம் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்து நல திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பி என் எல் பாபு மற்றும் மருத்துவர்கள் சசிரேகா அபிநயா அபிராமி ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.