குடியாத்தம்: மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு!

81பார்த்தது
குடியாத்தம்: மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு!
வேலூர் குடியாத்தத்தை அடுத்த ராமாலை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மதியழகன் (55). இவர், சம்பவத்தன்று ராமாலை தண்ணீர் பந்தல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் தேக்கு மர கிளைகளை தொரடு மூலம் சீர் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பியில் தொரடு பட்டுள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி மதியழகன் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி