சிறுமி கடத்தல் - 3 வாலிபர்கள் கைது!

53பார்த்தது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கார்க்கூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி காணாமல் போனதாக அவரது பெற்றோர் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுமியும், ஏரிகுத்தி புதுமனை பகுதியைச் சேர்ந்த சந்துரு பாண்டியன் (30) என்ற கட்டிட மேஸ்திரியும் காதலித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று சிறுமியை சந்துரு பாண்டியன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும், சிறுமியை கடத்துவதற்கு ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்த சந்திரன் என்கிற சாரதி (22), சதீஷ் (35), நித்தீஷ் (20) ஆகிய 3 பேர் உடந்தையாக இருந்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து சாரதி, சதீஷ், நித்தீஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுமியுடன் தலைமறைவான கட்டிட மேஸ்திரி சந்துரு பாண்டியனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி