வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் கிராமத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ கெங்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
இந்நிலையில் கெங்கைஅம்மன் சிரசு காளியம்மன் கோவிலிருந்து மேளதாளங்கள் முழங்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் நேர்த்திகடனை நிறைவேற்ற வழிநெடுகிலும் மலர்மாலை மற்றும் எலுமிச்சைப்பழம் மாலை ஆகியவற்றை சிரசு மீது வீசி வழி நெடுங்கிலும் பக்தர்கள் தரையில் படுத்தும் சூர தேங்காய்களை உடைத்தும் சண்டி மேளம் முழங்க சிலம்பாட்டதுடன் அம்மனை ஆலயம் கொண்டு வரப்பட்டு அம்மன் உடல் மீது சிரசு பொருத்தப்பட்டது.
கெங்கை அம்மன் சிரசு திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.