குடியாத்தம்: காரில் கடத்தி வரப்பட்ட 12கி கஞ்சா பறிமுதல்!

62பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்திய வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள சைணகுண்டா சோதனை சாவடி அருகே குடியாத்தம் தாலுகா போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 12 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது. மேலும் கஞ்சாவை கடத்தி வந்த குடியாத்தம் பகுதியை சேர்ந்த குடியரசன் (24), கோகுல்குமார் ( 26), மாதேஷ் (21) மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன்( 23) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி