லட்சுமி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா!

56பார்த்தது
லட்சுமி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா ராமாலை ஊராட்சியை சேர்ந்த கொச்சலூர் கிராமத்தில் உள்ள லட்சுமி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் பூஜை நடந்தது.

ஆடி மாதம் 2-ம் வெள்ளியை யொட்டி லட்சுமி அம்மன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், இரவில் அம்மன் பூபல்லக்கு உலாவும் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என். இ. சத்யானந்தம், ராமாலை ஊராட்சி மன்ற தலைவர் கே. பி. சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், ஒன்றிய பொருளாளர் ஏ. ஜே. பத்ரிநாத், ஒன்றிய இளைஞரணி ஜி. ஜெயபிரகாஷ் உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி