தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்!

558பார்த்தது
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு சமையல் கலை அனைத்து அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று குடியாத்தம் அடுத்த கமலாபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மாநில தலைவர் லோகநாதன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் ஆர். வி. மூர்த்தி தலைமையில் கர்ணன் ஏழுமலை. ரவி வி. சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் அப்பு பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில் சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஜெகதீசன் அவர்கள் கலந்துகொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கினார். குடியாத்த வக்கீல்கள் சங்க துணைத் தலைவர் பரந்தாமன் அவர்கள் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களின் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி