பேரணாம்பட்டில் மது விற்ற பெண்கள் கைது!

82பார்த்தது
பேரணாம்பட்டில் மது விற்ற பெண்கள் கைது!
பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற மசிகம் கிராமத்தை சேர்ந்த தமிழரசி (வயது 45) என்பவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பக்காலப்பல்லி கிராமத்தை சேர்ந்த யசோதா (43) என்பவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி