வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே அகரம் நான்கு முனை சந்திப்பு சாலையில் வேப்பங்குப்பம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த நித்திஷ் என்பதும், இவர் தேவிச்செட்டி குப்பம் பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து நிதிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.