வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை நைனாத்தமுதலி தெருவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலுக்கு பக்தர்கள் சென்ற போது மூலவர் அம்மன் கழுத்தில் இருந்த சிறு நகையும், உற்சவர் கழுத்தில் இருந்த சிறு நகையும் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் குடியாத்தம் டவுன் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி உள்ளிட்ட போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மர்ம நபர்கள் கோவிலில் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.