கே வி குப்பம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொங்கல் இலவச வேட்டி சேலைகள் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.
கே வி குப்பம் தாலுகாவில் உள்ள 30, 799 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வழங்குவதற்கான இலவச வேட்டி சேலைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து இந்த வேட்டி சேலைகள் பொது பிரிவு மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமூக பாதுகாப்பு பிரிவு மூலம் உதவித்தொகை பெறுபவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. அதன்படி கே வி குப்பம் தாலுகாவிற்கு 27, 691 சேலைகளும் 27, 073 வேட்டிகளும் வந்துள்ளன. இவற்றை தாலுகா அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை இந்த வாரத்துக்குள் முடிந்து பயனாளிகளிடம் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.