வேலூர் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், பேரிளம் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண், முதிர்கன்னிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோர்களை நலவாரிய உறுப்பினர்களாக சேர்க்க வரும் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.