கெங்கையம்மன் கோவில் திருவிழா பூ பல்லக்கு விடியவிடிய வீதி உலா

582பார்த்தது
கெங்கையம்மன் கோவில் திருவிழா பூ பல்லக்கு விடியவிடிய வீதி உலா
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும், கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 14-ந் தேதி தேர்த்திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடந்தது. இந்த விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இவ்விழாவின் தொடர்ச்சியாக பூப்பல்லக்கு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் அருகே கோபாலபுரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிவலிங்கம் மற்றும் விநாயகர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய உலா வந்தது. பல்லக்கில் அமைக்கப்பட்டிருந்த விதவிதமான அலங்காரங்களில் அம்மனை வழிபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி